பொது செய்தி

தமிழ்நாடு

'ஹாட்ரிக்' வெற்றி பெற்றும் அ.தி.மு.க., சோகம்

Added : மே 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சட்டசபை தனி தொகுதியில், அ.தி.மு.க., ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்தாலும், அ.தி.மு.க., ஆட்சி அமையாததால் தொண்டர்கள் சேகத்தில் உள்ளனர். . கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார். தி.மு.க., கூட்டணியில் காங்., மணிரத்தினம் போட்டியிட்டார். செந்தில்குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 643 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சட்டசபை தனி தொகுதியில், அ.தி.மு.க., ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்தாலும், அ.தி.மு.க., ஆட்சி அமையாததால் தொண்டர்கள் சேகத்தில் உள்ளனர். . கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார். தி.மு.க., கூட்டணியில் காங்., மணிரத்தினம் போட்டியிட்டார். செந்தில்குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 643 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். காங்., மணிரத்தினம் , 84 ஆயிரத்து 752 ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார்.இதில் 25 ஆயிரத்து 891 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின் கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் இதுவரை மூன்று சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. மூன்றிலும் அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றது. ஹாட்ரிக் வெற்றி பெற்ற போதிலும் , தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கமுடியாததாலும் . உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட மாவட்ட செயலர் குமரகுரு தோல்வி அடைந்ததாலும் அ.தி.மு.க., வினர் வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாமல் சோகத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X