பொது செய்தி

தமிழ்நாடு

நாய்களுக்கு வேகமாக பரவும் நோய்த்தாக்குதல்; தடுப்பூசி போட டாக்டர்கள் அறிவுரை

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை பகுதியில், நாய்களுக்கு பரவும், ரத்தக்கழிச்சல் நோய்க்கு குறித்த நேரத்தில், சிகிச்சை அளிக்க வேண்டும் என, கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வளர்ப்பு நாய்களுக்கு, ரத்தக்கழிச்சல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும், நாய் காலரா பரவி வருகிறது. குறிப்பாக, நான்கு ஆண்டுக்கு குறைந்த வயதுடைய நாய்களை

உடுமலை : உடுமலை பகுதியில், நாய்களுக்கு பரவும், ரத்தக்கழிச்சல் நோய்க்கு குறித்த நேரத்தில், சிகிச்சை அளிக்க வேண்டும் என, கால்நடை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வளர்ப்பு நாய்களுக்கு, ரத்தக்கழிச்சல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும், நாய் காலரா பரவி வருகிறது. குறிப்பாக, நான்கு ஆண்டுக்கு குறைந்த வயதுடைய நாய்களை இந்நோய் தாக்குவதுடன், பரவும் தன்மை உடையதாகும்.உடுமலை கால்நடை மருத்துவக்கல்லுாரி சிகிச்சை வளாக, பேராசிரியர்கள் இன்பராஜ், ரமா, விக்னேஷ்வரன், மோனிகா, சந்திரசேகரன் குழுவினர் கூறியதாவது:

நாய்களுக்கு, 'கேனைன் பர்வோ' என்ற வைரஸ் தாக்குதலால், இந்நோய் பரவுகிறது. நாய்களின் இருதய மண்டலம் மற்றும் செரிமான மண்டலத்தை தாக்கி, பாதிப்பை ஏற்படுத்தும்.இவற்றில், 90 சதவீதம், மேல் உணவு குழல் மற்றும் குடலில் உள்ள திசுக்களை, தாக்கி துர்நாற்றத்துடன் கூடிய, ரத்தக்கழிச்சல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தி, இருதய மண்டலத்தை தாக்கும் போது, நாய்கள் உடனடியாக இறந்து விடும்.

நோய் அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நாய்கள், சில நாட்கள் உணவு உட்கொள்ளாமல், சோர்ந்து காணப்படும்; பிறகு நுரை கலந்த வாந்தி மற்றும் ரத்தக்கழிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும்.நோயை குணப்படுத்தும் மருந்து நடைமுறையில், இல்லாததால், உடலுக்கு நீர்ச்சத்து அளித்தல் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் வாயிலாக, நோயினால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்தலாம். கால்நடை மருத்துவர் வாயிலாக, நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளை, நாய்களுக்கு, அளிக்கலாம். முறையான தடுப்பூசிகள் போடுவதும், அவற்றை சீரான கால இடைவெளியில் பின்பற்றுவதும் அவசியமாகும்.

தடுக்கும் முறைகள்

செல்லப்பிராணிகளை, பராமரிக்கும் இடங்களையும், வீட்டையும் சுத்தமாக பராமரிப்பது அவசியமாகும். நாய்க்குட்டிகளை, பிறந்த, 45 நாட்கள் வரை, அதன் தாயிடமிருந்து பிரிக்கக்கூடாது. இல்லாவிட்டால், குட்டிகளுக்கு, நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து, நச்சுயிரி தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகமாகும். வளர்க்கும் நாய்க்குட்டிகளை, நான்கு மாதம் வரை, ரோட்டிலோ அல்லது துாய்மையற்ற பகுதிகளிலோ அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.நோய் வராமல், தடுக்க, செல்லப்பிராணிகளுக்கு, கால்நடை மருத்துவர் வாயிலாக, குட்டியின், 6, 9,12 வது வாரத்தில், தடுப்பூசி போட வேண்டும். மேலும், விபரங்களுக்கு, பெதப்பம்பட்டியிலுள்ள, கால்நடை சிகிச்சை வளாகத்தை அணுகலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X