சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனை மரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி

Added : மே 04, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்; நொங்கு பறிக்க பனை மரம் ஏறியபோது தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி.24; பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, விழுப்புரம் மாவட்டம் ஆனத்துார் வீரன் கோவில் அருகில் உள்ள ஏரிக்கரையில் நொங்கு பறிப்பதற்காக பனை மரம் ஏறினார்.அப்போது, கால் வழுக்கி விழுந்தார்.

திருவெண்ணெய்நல்லுார்; நொங்கு பறிக்க பனை மரம் ஏறியபோது தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி.24; பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, விழுப்புரம் மாவட்டம் ஆனத்துார் வீரன் கோவில் அருகில் உள்ள ஏரிக்கரையில் நொங்கு பறிப்பதற்காக பனை மரம் ஏறினார்.அப்போது, கால் வழுக்கி விழுந்தார். அதில் படுகாயமடைந்த ராஜியை, அவரது நண்பர்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X