சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்களை மிரட்டும் சிறுத்தை; அச்சத்தில் வால்பாறை மக்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை நகரில், அடிக்கடி உலா வரும் சிறுத்தையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.வால்பாறையில், எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த சிறுத்தை, சமீப காலமாக நகரில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை உட்கொள்கிறது.சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் இரண்டு
 மக்களை மிரட்டும் சிறுத்தை; அச்சத்தில் வால்பாறை மக்கள்

வால்பாறை : வால்பாறை நகரில், அடிக்கடி உலா வரும் சிறுத்தையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறையில், எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த சிறுத்தை, சமீப காலமாக நகரில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை உட்கொள்கிறது.சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் இரண்டு இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். 20 நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறை அதிகாரிகளுக்கு, போக்கு காட்டி வருகிறது.

கடந்த வாரம், வால்பாறை துளசிங்கநகரில் புகுந்த சிறுத்தை, வீட்டின் மீது ஏறி மேற்கூரையை சேதப்படுத்தியது. வீட்டின் மீது சிறுத்தை பாய்ந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் நேரத்தில் துளசிங்க நகர் வனத்துறை அலுவலத்தின் அருகே உள்ள தேயிலை காட்டில் சிறுத்தை நடந்து சென்றதை கண்ட மக்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். கடந்த ஒரு வாரமாக துளசிங்க நகர் பகுதியை சுற்றிலும் வலம் வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X