பொது செய்தி

தமிழ்நாடு

'துரோகத்தால் வீழ்ந்தோம்' தி.மு.க.,வில் சலசலப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரிடையே, சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 'துரோகத்தால் வீழ்ந்தோம்' என்ற தலைப்பிலான பதிவுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த, 2ம் தேதி வெளியானது. இதில், பொள்ளாச்சி தொகுதியின் முடிவுகளை, பல்வேறு காரணங்களால் தமிழகமே உற்று நோக்கியது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று,

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரிடையே, சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 'துரோகத்தால் வீழ்ந்தோம்' என்ற தலைப்பிலான பதிவுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த, 2ம் தேதி வெளியானது. இதில், பொள்ளாச்சி தொகுதியின் முடிவுகளை, பல்வேறு காரணங்களால் தமிழகமே உற்று நோக்கியது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று, தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியானது. ஆனால், பொள்ளாச்சியில் தி.மு.க., தோல்வியடைந்தது; அ.தி.மு.க., வென்றது.இதனால், பொள்ளாச்சி தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் தீவிர களப்பணியாற்றிய தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் விரக்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில், 'பொள்ளாச்சியில் துரோகத்தால் வீழ்ந்தோம்' என்ற தலைப்பிலான பதிவுகள் அதிகம் வலம் வருகின்றன. அந்த பதிவுகளில், தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தேர்தல் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடவில்லை என்பது, ஓட்டுச்சாவடி வாரியாக கிடைத்துள்ள ஓட்டுகளின் அடிப்படையில் தெரிய வருவதாகவும் குறிப்பிடப்படப்படுகிறது.

மேலும், பணத்துக்கு விலை போன சிலரின் துரோகத்தால், வெற்றி பெற வேண்டிய தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளதாகவும் குமுறுகின்றனர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும், துரோகம் செய்தவர்களை களை எடுப்பது உறுதி என்று பரவும் பதிவுகள், அக்கட்சி மற்றும் கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதெல்லாம் சகஜம்!

பொள்ளாச்சி தி.மு.க., வை பொறுத்த வரை, இது போன்ற 'உள்குத்து' குற்றச்சாட்டுகள், பல தேர்தல்களில் எழுந்துள்ளன.கடந்த உள்ளாட்சி தேர்தலிலும், இரண்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள், அ.தி.மு.க., ஒன்றிய தலைவர் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டு, வெற்றி பெற வைத்த கதை அனைவருக்கும் தெரியும்.இருந்தும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் மீது, கட்சி ரீதியான நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. கட்சி தலைமையின் இந்த மெத்தன போக்கு தான், இன்று சட்டசபை தேர்தல் வரை எதிரொலித்துள்ளது என்கின்றனர் தி.மு.க., தொண்டர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X