பொது செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., 'டிபாசிட்' இழப்புதே.மு.தி.க., ஓட்டுகள் எங்கே?

Added : மே 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் தொகுதியில் அ.ம.மு.க., வேட்பாளர் 'டிபாசிட்' இழந்ததால், தே.மு.தி.க.,வின் ஓட்டுகள் யாருக்கு சாதகமாக பதிவாகியது என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், விழுப்புரம் அ.ம.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் போட்டியிட்டார். அ.ம.மு.க., தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற்றிருந்தது. பாலசுந்தரத்தை ஆதரித்து, அ.ம.மு.க., பொதுச்செயலாளர்

விழுப்புரம் தொகுதியில் அ.ம.மு.க., வேட்பாளர் 'டிபாசிட்' இழந்ததால், தே.மு.தி.க.,வின் ஓட்டுகள் யாருக்கு சாதகமாக பதிவாகியது என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், விழுப்புரம் அ.ம.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் போட்டியிட்டார். அ.ம.மு.க., தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற்றிருந்தது. பாலசுந்தரத்தை ஆதரித்து, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார்.இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் மொத்தமுள்ள 2,62,068 ஓட்டுகளில் 2,01,726 ஓட்டுகள் பதிவாகியது. பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெற்றால் மட்டுமே டிபாசிட் பெற முடியும். அதன்படி, பாலசுந்தரம் 33,621 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பாலசுந்தரம் 1,695 ஓட்டுகள் மட்டுமே பெற்று 'டிபாசிட்' இழந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன் 24,907 ஓட்டுகள் பெற்றார்.இத்தேர்தலில் தே.மு.தி.க., ஓட்டுகள் அ.ம.மு.க.,விற்கு பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், தே.மு.தி.க., ஓட்டுகள் யாருக்கு சாதகமாக பதிவாகியது என தெரியாமல் அக்கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்
-நமது நிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X