பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறை மீறல்

Added : மே 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் நகரில் கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் கடைபிடிக்காத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகரில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி, அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் கடைகளில் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என சுகாதாரம், நகராட்சி, காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.இதனை

விழுப்புரம்; விழுப்புரம் நகரில் கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் கடைபிடிக்காத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகரில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி, அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் கடைகளில் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என சுகாதாரம், நகராட்சி, காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து, நேற்று நகராட்சி ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் காமராஜர் தெரு, மாம்பழபட்டு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், மாம்பழட்டு சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில், கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் கடைபிடிக்காமல் மக்கள் கூட்டத்தை கூட்டி வியாபாரம் செய்ததை கண்டு பிடித்தனர்.அதனையடுத்து, அந்த கடைக்கு அதிகாரிகள் 500 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், தொடர்ந்து விதியை மீறினால், கடைக்கு சீல் வைக்கப்படும் னெ எச்சரித்தனர். இதேபோன்று மேலும், 10 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X