பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் தி.மு.க., வேட்பாளரின் ஓட்டு வித்தியாசம் 14,868 ஆக குறைந்தது

Added : மே 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் 14,868 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், விழுப்புரம் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, கீழ்பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் நடந்தது. அப்போது, 14 மேஜைகளில், 27 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணியபோது, விழுப்புரம் நகராட்சி மார்க்கெட் கமிட்டி

விழுப்புரம்; விழுப்புரம் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் 14,868 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், விழுப்புரம் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, கீழ்பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் நடந்தது. அப்போது, 14 மேஜைகளில், 27 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணியபோது, விழுப்புரம் நகராட்சி மார்க்கெட் கமிட்டி ஓட்டு மையம் மற்றும் ஓட்டேரிப்பாளையம் ஓட்டு மையம் ஆகிய இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியது.இதனால், இந்த இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓட்டு எண்ணிக்கை நடந்தது. கடைசி சுற்று முடிவில், தபால் ஓட்டுகளை சேர்த்து தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் 1,01,755 பெற்று முன்னிலையில் இருந்தார். அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் 86,878 பெற்றிருந்தார். இதனால், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, பழுதான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள், வி.வி.,பேட் இயந்திரம் மூலம் எண்ணப்பட்டது. அதில், தி.மு.க., வேட்பாளர் 516 ஓட்டுகளையும், அ.தி.மு.க., வேட்பாளர் 525 ஓட்டுகளும் பெற்றனர். இதனால், தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் பெற்ற மொத்த ஓட்டுகள் 1,02,271 ஆகவம், அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் பெற்ற மொத்த ஓட்டுகள் 87,403 ஆக உயர்ந்தது.பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளில், தி.மு.க.,வை விட அ.தி.முக., வேட்பாளர் சண்முகம் கூடுதலாக 9 ஓட்டுகள் பெற்றதால், ஓட்டு வித்தியாதமும் 14,868 ஆக குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X