சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் பணி முடிந்ததுமின்னணு இயந்திரங்களுக்கு 'சீல்'

Added : மே 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை முடிந்து சீல் வைக்கப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்., 6ம் தேதி நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டபை தொகுதிகளில் உள்ள 2,368 ஓட்டுசாவடிகளில் 3,288 பேலட் யூனிட், 2,844

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை முடிந்து சீல் வைக்கப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்., 6ம் தேதி நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டபை தொகுதிகளில் உள்ள 2,368 ஓட்டுசாவடிகளில் 3,288 பேலட் யூனிட், 2,844 கன்ட்ரோல் யூனிட், 3,179 வி.வி., பேடு பயன்படுத்தப்பட்டது. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏழு ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் சேமிப்பு கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.அங்கு, அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் அண்ணாதுரை சீல் வைத்தார். அப்போது, அ.தி.மு.க., நகர துணை செயலாளர் செந்தில், தி.மு.க., வழக்கறிஞர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X