தமிழ்நாடு

வசமானது: 10 ஆண்டிற்கு பின் செஞ்சி தொகுதி ஆளும்கட்சி...புதிய திட்டங்கள் வரும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி

Added : மே 04, 2021
Share
Advertisement
செஞ்சி; கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தொகுதி ஆளும் கட்சி வசமானதால், வளர்ச்சி பணிகள் நடைபெறும் என செஞ்சி தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக செஞ்சி தொகுதி உள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழில். பருவமழை பொய்த்து போனால் விவசாயம் நலிந்து மக்கள் வருவாய் இழந்து வறுமை ஏற்படும். இந்த தொகுதியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள்

செஞ்சி; கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தொகுதி ஆளும் கட்சி வசமானதால், வளர்ச்சி பணிகள் நடைபெறும் என செஞ்சி தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக செஞ்சி தொகுதி உள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழில். பருவமழை பொய்த்து போனால் விவசாயம் நலிந்து மக்கள் வருவாய் இழந்து வறுமை ஏற்படும். இந்த தொகுதியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டாலும், தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் அமைச்சர்களிடமே உள்ளது.மாவட்டத்தில் புதிய திட்டம், கல்லுாரிகளை கொண்டு வரும் அமைச்சர்கள் அரசியல் காரணத்தால் செஞ்சி தொகுதியை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2016ல் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமாரும், 2016ல் தி.மு.க., வேட்பாளர் மஸ்தானும் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு முறையும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களாகவே அமைந்து விட்டது. இதனால் ஆளும் கட்சியின் புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தவில்லை. இந்த தொகுதியில் செஞ்சி, மேல்மலையனுார் என இரண்டு தாலுகாக்கள் இணைந்து இருந்தாலும், அரசு கல்லுாரிகள் இல்லை. வேலை வாய்ப்பிற்கு ஏற்ற தொழிற்சாலைகள் இல்லை. படித்த இளைஞர்கள் வேலை தேடி பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுள்ளனர். பிரதான தொழிலாக உள்ள விவசாயத்தை மேம்படுத்த புதிய அணைகள், நீர் நிலைகளை உருவாக்குவது, நீர் ஆதாரங்களையும், வாய்க்கால்களை நவீன படுத்துவதிலும் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. ஏரிகளும், வாய்க்கால்களும் பல இடங்களில் துார்ந்து வருகின்றன.செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேவையற்ற கட்டடங்களை கட்டி அரசு பணத்தை வீணடித்துள்ளனர். தேவையான ஏலம் கூடமும், கட்டமைப்பு வசதியும், ஆட்கள் பற்றாக்குறையினாலும் முழு வீச்சில் செயல்படவில்லை.

தென்இந்தியாவில் முழு அமைப்புடன் உள்ள செஞ்சி கோட்டையை இதுவரை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இங்கு சுற்றுலாத்துறை மூலம் சிறிய நிழற்குடை கூட அமைக்கவில்லை.ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் பெரிய அளவிலான நீர் நிலைகள் கோட்டைக்குள்ளும், வெளியிலும் இருந்தும் இதுவரை படகு சவாரி வசதி ஏற்படுத்தவில்லை.பல லட்சம் பக்தர்கள் வரும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் விழாக்காலங்களில் பக்தர்கள் தங்க விடுதிகள் இல்லை. இரவு முழுவதும் தெரு ஓரங்களிலும், மைதானங்களிலும் படுத்து துாங்குவதும், கழிவறை, தண்ணீர் வசதியின்றி விவசாய நிலம், ஏரிகளை தேடி செல்லும் அவலம் தொடர்கிறது. செஞ்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செஞ்சி கோட்டையை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும். விவசாய கல்லுாரி, விதை ஆராய்ச்சி மையம், மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சி எம்.எல்.ஏ., க்கள் வசமிருந்த செஞ்சி தொகுதி, தற்போது ஆளும் கட்சி வசமாகி உள்ளதால், தேர்தல் பிரசாரத்தில் கூறிய திட்டங்கள் அனைத்தையும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ள மஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X