பொது செய்தி

தமிழ்நாடு

1.35 லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயார்; கல்லாறு தோட்டக்கலை பண்ணை அழைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், ஒரு லட்சத்து, 35 ஆயிரம் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன என, மேலாளர் தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், கல்லாற்றில் மலைகளுக்கு இடையே, 1900ம் ஆண்டு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்பட்டது.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இப்பண்ணையில், ஏராளமான பழ மரங்களும், வாசனை திரவிய மரங்களும், அலங்கார செடிகளும் உள்ளன. இங்கு

மேட்டுப்பாளையம் : கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், ஒரு லட்சத்து, 35 ஆயிரம் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன என, மேலாளர் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், கல்லாற்றில் மலைகளுக்கு இடையே, 1900ம் ஆண்டு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்பட்டது.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இப்பண்ணையில், ஏராளமான பழ மரங்களும், வாசனை திரவிய மரங்களும், அலங்கார செடிகளும் உள்ளன. இங்கு தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படுகின்றன.

தரமான நாற்றுகள் என்பதால், விவசாயிகள், அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது ஏராளமான நாற்றுகள், விற்பனைக்கு தயார் நிலையில் பண்ணையில் உள்ளன.இதுகுறித்து தோட்டக்கலைத்துறை பண்ணை மேலாளர் ஹரிபாஸ்கர் கூறியதாவது:தரமான நாற்றுகள், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டை விட, இந்தாண்டு கூடுதலாக விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடவுக்கு தயார் நிலையில், 90 ஆயிரம் மோகித் நகர் ரக பாக்கு நாற்றுகள்; 23 ஆயிரம் சில்வர் ஓக் மர நாற்றுகள்; 10 ஆயிரம் மிளகு நாற்றுகள்; 11 ஆயிரம் அலங்காரச் செடி நாற்றுகள்; ஆயிரம் இதர வகை நாற்றுகள், என, ஒரு லட்சத்து, 35 ஆயிரம் நாற்றுகள் உள்ளன. ஒரு பாக்கு நாற்றின் விலை, 18; மிளகு, சில்வர் ஓக் நாற்றுகள், 6; அலங்காரச் செடிகள், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. விரும்பும் விவசாயிகள் அலுவலக நேரத்தில் வந்து, வாங்கிச் சென்று பயன் பெறலாம்.இவ்வாறு மேலாளர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X