பொது செய்தி

தமிழ்நாடு

சொகுசு பஸ்களில் கூடுதல் கட்டணம்

Added : மே 04, 2021
Share
Advertisement
அன்னுார் : சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், கிராம மக்கள் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.கோவையிலிருந்து, சரவணம்பட்டி, கோவில்பாளையம், கணேசபுரம், கரியாம்பாளையம் வழியாக அன்னுாருக்கு அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சொகுசு பஸ்களில், குறைந்தபட்ச கட்டணமாக, 11 ரூபாயும், அன்னுாரில் இருந்து கோவைக்கு 35 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த சொகுசு பஸ்களில் அதிக

அன்னுார் : சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், கிராம மக்கள் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.

கோவையிலிருந்து, சரவணம்பட்டி, கோவில்பாளையம், கணேசபுரம், கரியாம்பாளையம் வழியாக அன்னுாருக்கு அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சொகுசு பஸ்களில், குறைந்தபட்ச கட்டணமாக, 11 ரூபாயும், அன்னுாரில் இருந்து கோவைக்கு 35 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் தர வேண்டியுள்ளது என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:அன்னுாரில் இருந்து, கோவை செல்லும் வழியில், மைல்கல், கரியாம்பாளையம், தண்ணீர் தொட்டி, எல்லப்பாளையம், கணேசபுரம், ஓரைக்கால்பாளையம், குன்னத்துார், கோவில்பாளையம் என, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் கோவை மற்றும் அன்னுார் செல்ல டவுன்பஸ்களையே நம்பி உள்ளனர். இதில் கோவையிலிருந்து அன்னுாருக்கு இயங்கும் டவுன் பஸ்களில் பாதி பஸ்கள், சொகுசு பஸ்கள் ஆக உள்ளன.சொகுசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக 11 ரூபாய் செலுத்த வேண்டும். சாதாரண பஸ்களில் நான்கு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.மேலும், சாதாரண பஸ்ஸில், அன்னுாரில் இருந்து கோவைக்கு, 16 ரூபாய் மட்டுமே, கட்டணமாக உள்ளது. சொகுசு பஸ்ஸில், 35 ரூபாய் வசூலிக்கின்றனர். இதனால் சாதாரண பஸ்களில் செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. அன்னுாரில் இருந்து கோவைக்கு, இயக்கப்படும் மப்சல் பஸ்களில் கூட, 19 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனினும் அந்த பஸ்கள் பல கிராமங்களில் நின்று செல்வதில்லை.எனவே, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அன்னுாரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும், ஆறு சொகுசு டவுன் பஸ்களை, சாதாரண டவுன் பஸ்களாக மாற்றி இயக்க வேண்டும்.இவ்வாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X