கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ 65.03 லட்சத்திற்கு வர்த்தகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ 65.03 லட்சத்திற்கு வர்த்தகம்

Added : மே 04, 2021
Share
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று ரூ.65.03 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை மிகுதியால், சாகுபடி நிலங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்காசோளம் மற்றும் உளுந்து பயிர்களின் வரத்து அதிகரித்து

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று ரூ.65.03 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை மிகுதியால், சாகுபடி நிலங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்காசோளம் மற்றும் உளுந்து பயிர்களின் வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மார்க்கெட் கமிட்டிக்கு 800 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல், 67 மூட்டை உளுந்து, 60 மூட்டை மக்காச்சோளம், 25 மூட்டை கம்பு, 6 மூட்டை மணிலா, தலா 2 மூட்டை வரகு, ஆமணக்கு, ஒரு மூட்டை ராகி உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.நேற்றைய வர்த்தகத்தில், சராசரியாக ஒரு மூட்டை எள் ரூ.7,458, உளுந்து ரூ.4,999, கம்பு ரூ.2,054, மக்காச்சோளம் ரூ.1,615, மணிலா ரூ.6,959, வரகு ரூ.1,818, ஆமணக்கு ரூ.3,189, ராகி ரூ.2,569க்கு விலை போனது. மார்க்கெட் கமிட்டிக்கு 514 விவசாயிகள் கொண்டு வந்த 963 மூட்டை விவசாய விளை பொருட்கள் 65 லட்சத்து 3 ஆயிரத்து 900 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X