தமிழ்நாடு

கொண்டாட முடியவில்லை! ஆட்சியைப் பிடித்தும் தோற்றதால் திமுக; வென்றும் ஆட்சியை இழந்ததால் அதிமுக

Added : மே 04, 2021
Share
Advertisement
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி, என்ற கண்ணதாசனின் வரிகள், கோவை மாவட்ட அரசியல் கட்சியினரின் இன்றைய சூழ்நிலைக்கு நன்றாகவே பொருந்துகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியைப் பிடித்தாலும், தொகுதியில் தோற்றதால், தி.மு.க.,வினரால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. அதேபோல, தங்களது தொகுதிகளில் வென்றாலும், ஆட்சியை இழந்ததால், அ.தி.மு.க.,வினரால் கொண்டாட
 கொண்டாட முடியவில்லை! ஆட்சியைப் பிடித்தும் தோற்றதால் திமுக; வென்றும் ஆட்சியை இழந்ததால் அதிமுக

இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி, என்ற கண்ணதாசனின் வரிகள், கோவை மாவட்ட அரசியல் கட்சியினரின் இன்றைய சூழ்நிலைக்கு நன்றாகவே பொருந்துகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியைப் பிடித்தாலும், தொகுதியில் தோற்றதால், தி.மு.க.,வினரால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. அதேபோல, தங்களது தொகுதிகளில் வென்றாலும், ஆட்சியை இழந்ததால், அ.தி.மு.க.,வினரால் கொண்டாட முடியவில்லை.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியில் அமர் கிறது தி.மு.க., அதுவும் தனிப்பெரும்பான்மையுடன். இது தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், தங்களது தொகுதிகளில் தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளதால், வெற்றியைக் கொண்டாடுவதா, தோல் விக்காக வருந்துவதா என்ற நிலையில் உள்ளனர்.

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டத்தின்,10 தொகுதிகளில், மேட்டுப்பாளையம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஓட்டு எண்ணிக் கை துவக்கத்தில் இருந்து, முன்னணியில் இருந்தார். ஆனால், இறுதிக் கட்டத்தில், 2,456 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.அதே நேரத்தில் மேட்டுப்பாளையம் தொகுதி, அ.தி.மு.க., வின் கோட்டை என்பதை, கட்சியினர் நிரூபித்து விட்டனர். இங்கு, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், ஆட்சியை இழந்த சோகத்தில், உள்ளூர் வெற்றியைக்கொண்டாட முடியவில்லை.

சூலுாரில் ஹாட்ரிக்

சூலுார் தொகுதி, 2011ல் புதிதாக உருவாக்கப்பட்டது. மூன்று பொதுதேர்தல்கள், ஒரு இடைத் தேர்தல் என, தொகுதி மக்கள் நான்கு தேர்தல்களை சந்தித்தனர். அதில், முதல்முறை அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வெற்றி பெற்றது. 2016ல் பொதுதேர்தல் மற்றும் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ., வுமான கந்தசாமி வெற்றி பெற்றார். ஹாட்ரிக் வெற்றி பெற்றும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ., அந்தஸ்து பறிபோனதால், கொண்டாட்ட மனநிலையில் அவர்கள் இல்லை.

அவிநாசி

அன்னுார் ஒன்றியத்தை உள்ளடக்கிய அவிநாசி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்ட சபாநாயகர் தனபால் 51 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இது, ஏழாவது வெற்றி. திருப்பூர் மாவட்டத்தில்உள்ள 8 தொகுதிகளில்பல்லடம், திருப்பூர் வடக்கு, மடத்துக்குளம்,உடுமலை, அவிநாசி ஆகிய ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. அவிநாசி தொகுதியில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது.

அன்னுார் தொகுதியில் மட்டுமின்றி, அன்னுாரைச்சேர்ந்த அமுல் கந்தசாமி, வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.கொண்டாட, இரு காரணங் கள் இருந்தும், ஆட்சியை இழந்த சோகத்தில் அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.

கவுண்டம்பாளையம்

தொகுதி சீரமைப்பின் போது, தொண்டாமுத்துார் தொகுதியில் இருந்து கவுண்டம்பாளையம் தொகுதி உருவானது. இதில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், எஸ்.எஸ். குளம் ஒன்றியம், கோவைமாநகராட்சிக்கு உட்பட்ட, 23 வார்டுகள் அடங்கியுள்ளன.கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியான இங்கு, தொடர்ந்து மூன்றாவது முறையாக அ.தி.மு.க., வென்றுள்ளது.ஏட்டிக்கு போட்டிதமிழகத்தில் ஆட்சி அமைப்பதால் தி.மு.க.,வினரும், நான்கு இடங்களில் வெற்றி பெற்றதற்காக பா.ஜ.க.,வினரும் பட்டாசு வெடித்து இனிப்புவழங்கினர்.

அன்னுார் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை முன் தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தி.மு.க., தொழிற்சங்கத்தலைவர் ராமநாதன், செயலாளர் முருகேசன்,பொருளாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை தெற்கு உள்பட 4 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அன்னுாரில் பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.அன்னுார், கஞ்சப்பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம், கரியாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில்பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X