பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,வாக வெற்றி; கவுன்சிலர் பதவி ராஜினாமா

Added : மே 04, 2021
Share
Advertisement
அன்னுார் : கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், எம்.எல்.ஏ., வாக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அப்பதவி காலியாகிறது.அன்னுாரைச் சேர்ந்தவர் அமுல் கந்தசாமி. அ.தி.மு.க., மாநில இளைஞரணி துணைச் செயலாளர். 2020 ஜனவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளை உள்ளடக்கிய, மாவட்ட கவுன்சிலர் வார்டில் போட்டியிட்டு, இரண்டாம் முறையாக வென்றார். கோவை மாவட்ட ஊராட்சி

அன்னுார் : கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், எம்.எல்.ஏ., வாக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அப்பதவி காலியாகிறது.

அன்னுாரைச் சேர்ந்தவர் அமுல் கந்தசாமி. அ.தி.மு.க., மாநில இளைஞரணி துணைச் செயலாளர். 2020 ஜனவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளை உள்ளடக்கிய, மாவட்ட கவுன்சிலர் வார்டில் போட்டியிட்டு, இரண்டாம் முறையாக வென்றார். கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவர் அ.தி.மு.க., சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன்னுடைய மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். இதை ஏற்று மாவட்ட நிர்வாகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அன்னுார் ஒன்றியத்தில் உள்ள, 15 ஊராட்சிகள் அடங்கிய மாவட்ட கவுன்சிலர் வார்டு காலியாகும் நிலை உள்ளது.இப்பதவி காலியானால். இந்த நிதி ஆண்டில் மாவட்ட கவுன்சிலர் நிதி மூலம் நடைபெறும் பணிகள் மேற்கொள்ளப்படுவது சிரமம். 'எனவே, அரசு விரைவில் காலியான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும்' என அன்னுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X