தெரு நாய்கள் கடித்து குதறி இளங்கன்றுக்குட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தெரு நாய்கள் கடித்து குதறி இளங்கன்றுக்குட்டி பலி

Added : மே 04, 2021
Share
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், தெருநாய்கள் கடித்துக் குதறியதில், கன்றுக் குட்டி உயிரிழந்தது.மேட்டுப்பாளையம் நகராட்சியில், கோழி இறைச்சிக் கடைகளில் மீதமாகும் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. சாலையோரங்களில் வீசப்படுகின்றன.தெருநாய்கள் இவற்றைத் தின்றுவிட்டு, சுற்றித் திரிகின்றன. கோழி இறைச்சிக் கழிவுகள் இல்லாதபோது, சாலையில் மேயும் கோழிகள்,

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், தெருநாய்கள் கடித்துக் குதறியதில், கன்றுக் குட்டி உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில், கோழி இறைச்சிக் கடைகளில் மீதமாகும் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. சாலையோரங்களில் வீசப்படுகின்றன.தெருநாய்கள் இவற்றைத் தின்றுவிட்டு, சுற்றித் திரிகின்றன. கோழி இறைச்சிக் கழிவுகள் இல்லாதபோது, சாலையில் மேயும் கோழிகள், ஆடுகளையும், கன்றுக் குட்டிகளையும் கடித்துக் குதறுகின்றன.32 வது வார்டு தாசம்பாளையம் சாலை, பள்ளத்து மேட்டை சேர்ந்த கலாமணி என்ற பெண் கூறியதாவது:

எங்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள பள்ளத்தில், கோழி இறைச்சி கழிவுகளையும், அழுகிய முட்டைகளையும் கடை உரிமையாளர்கள் கொட்டுகின்றனர். இக்கழிவுகளைச் சாப்பிட, 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன.நேற்று காலை, எங்களது கன்று குட்டியை, பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்துக்கொண்டிருந்தன. சத்தம் போட்டு விரட்டி விட்டோம். ஆனாலும், பலத்த காயமடைந்த கன்றுக்குட்டி இறந்து விட்டது.

இரு மாதங்களுக்கு முன்பும் ஒரு கன்றுக் குட்டியை கடித்துக் கொன்றுவிட்டன. இந்தத் தெருநாய்கள், குழந்தைகளையும் கடித்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், தெருநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X