பொது செய்தி

தமிழ்நாடு

குளக்கரையில் கல் பதிக்கும் பணி நிறைவு

Added : மே 04, 2021
Share
Advertisement
சூலுார் : சூலுார் சின்னக்குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில், பெரிய குளம் மற்றும் சின்னக்குளம் உள்ளது. பெரிய குளம், 90 ஏக்கர் பரப்பளவும், சின்னக்குளம், 70 ஏக்கர் பரப்பளவும் கொண்டது.சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களை, துார் வார வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை

சூலுார் : சூலுார் சின்னக்குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில், பெரிய குளம் மற்றும் சின்னக்குளம் உள்ளது. பெரிய குளம், 90 ஏக்கர் பரப்பளவும், சின்னக்குளம், 70 ஏக்கர் பரப்பளவும் கொண்டது.

சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களை, துார் வார வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நொய்யல் ஆற்றில் துார் வாரி, தடுப்பணைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. அப்பணிகள் நடந்து வரும் நிலையில், குளக்கரைகளை பலப்படுத்த தடுப்பு சுவர் மற்றும் கற்கள் பதிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது.சூலுார் ஒன்றியத்துக்குட்பட்ட நீலம்பூர் ஆச்சான்குளம், பள்ளபாளையம் மற்றும் கண்ணம்பாளையம் குளத்தில், தடுப்பு சுவர் கட்டி, கற்கள் பதிக்கப்பட்டன. தொடர்ந்து, சூலுார் சின்னக் குளத்திலும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

பின்னர், குளக்கரையின் வடபுறம் முழுக்க குளத்தின் உட்புறத்தில் கற்கள் பதிக்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்தது. சிவன் கோவிலை சுற்றிலும் குப்பை கொட்டாமல் இருக்க, கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் முற்றுப்பெற்றுள்ளதால், குளக்கரையை பார்க்கும்போது, ரம்மியமாக காட்சி அளிக்கிறது.இதுகுறித்து நீர் நிலை ஆர்வலர்கள் கூறுகையில்,' குளக்கரையில் கற்கள் பதித்திருப்பது வரவேற்கத்தக்கது. குளக்கரையின் மீது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X