பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க கடைகள் மூடல்

Added : மே 04, 2021
Share
Advertisement
அன்னுார் : அன்னுார் அருகே பொகலுாரில், கடந்த வாரம், 65 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் இறந்தார். மேலும் ஊராட்சியில், 10 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, கடந்த மே 1ம் தேதி வியாபாரிகள், அனைத்துக் கட்சியினர், ஊராட்சி நிர்வாகத்தோடு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மே 3 முதல் ஒரு வாரத்திற்கு, தினமும் அதிகாலை 5:00 முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே கடைகளை திறப்பது என்றும், 2:00 முதல்

அன்னுார் : அன்னுார் அருகே பொகலுாரில், கடந்த வாரம், 65 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் இறந்தார். மேலும் ஊராட்சியில், 10 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, கடந்த மே 1ம் தேதி வியாபாரிகள், அனைத்துக் கட்சியினர், ஊராட்சி நிர்வாகத்தோடு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மே 3 முதல் ஒரு வாரத்திற்கு, தினமும் அதிகாலை 5:00 முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே கடைகளை திறப்பது என்றும், 2:00 முதல் மறுநாள் அதிகாலை 5:00 மணி வரை, கடைகளை அடைத்து விடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, நேற்று பொகலுாரில், பெட்டிக்கடை, டீக்கடை, ஓட்டல், மளிகை, பேன்சி கடை, சிறிய ஒர்க் ஷாப்புகள் என, அனைத்தும் மதியம் 2:00 மணிக்கு மூடப்பட்டன.அரசு இரவு 9:00 மணி வரை, கடையைத் திறந்திருக்க அனுமதி அளித்துள்ளபோதும், மக்கள் விழிப்புணர்வோடு மதியம் 2:00 மணிக்கே மூட முடிவு செய்ததை, சுகாதாரத் துறையினர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X