பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் எத்தனை குற்றங்கள்; மக்களுக்காக தகவல் பலகை

Added : மே 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில், தினசரி நடக்கும் குற்றங்கள் தொடர்பான பதிவுகளை பொதுமக்கள் அறிய, தகவல்பலகை நிறுவப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்குட்பட்ட, துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லை கவுண்டம்பாளையம் முதல் என்.ஜி.ஜி.ஓ., காலனி வரையும்; குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து, இடிகரை வரையும் உள்ளது.மக்கள் நெருக்கம் மிகுந்த,

பெ.நா.பாளையம் : துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில், தினசரி நடக்கும் குற்றங்கள் தொடர்பான பதிவுகளை பொதுமக்கள் அறிய, தகவல்பலகை நிறுவப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்குட்பட்ட, துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லை கவுண்டம்பாளையம் முதல் என்.ஜி.ஜி.ஓ., காலனி வரையும்; குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து, இடிகரை வரையும் உள்ளது.மக்கள் நெருக்கம் மிகுந்த, துடியலுார் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில், குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, தினசரி அதிகரித்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்தவும், போலீசாரின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கோவை எஸ்.பி.,செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில், துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் பலகை நிறுவப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கோர்ட் நடவடிக்கைகள், வாரண்ட் பெறப்பட்ட விவரங்கள், அதை செயல்படுத்திய எண்ணிக்கை, வழக்குகளில் சான்றிதழ் பெறப்பட்ட விவரங்கள், துடியலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை, இந்த அறிவிப்பு பலகையில், குறித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர, 'சிசிடிவி' கேமராக்கள் நிறுவப்பட்ட விவரங்கள், அதை வழங்கிய நபர்கள், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் எத்தனை, அவை எந்த வழக்குகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் விவரங்கள், ஏலம் விட்டு இருந்தால், அது குறித்த விவரங்கள், கிராம கண்காணிப்பு குழு விவரங்கள், வார்டு வாரியான கண்காணிப்புக்குழு, உள்ளூர் மார்க்கெட் குழு, அசோசியேசன் குழு ஆகியவை குறித்த விவரங்கள் அதில் குறித்து வைக்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, துடியலுார் போலீசார் கூறுகையில்,' பொதுமக்கள் அன்றாடம் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த தகவல் பலகை நிறுவப்பட்டுள்ளது. இதில், அனைத்து விபரங்களும், விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X