சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செத்த கோழிகளை கொட்டாதீர்; சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

Added : மே 04, 2021
Share
Advertisement
சூலுார் : "செத்த கோழிகளை பொது இடங்கள், நீர் நிலைகளில் கொட்டக்கூடாது," என, சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 1000த்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் கறிக்கோழிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.பண்ணையில் வளர்க்கப்படும் கறிக்கோழிகளில், சில கோழிகள் கடும் வெயில் காரணமாகவும், நோய்

சூலுார் : "செத்த கோழிகளை பொது இடங்கள், நீர் நிலைகளில் கொட்டக்கூடாது," என, சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 1000த்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் கறிக்கோழிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.பண்ணையில் வளர்க்கப்படும் கறிக்கோழிகளில், சில கோழிகள் கடும் வெயில் காரணமாகவும், நோய் பாதிப்பினாலும் இறக்க நேரிடுவது வாடிக்கை.இப்படி இறந்த கோழிகளை சில பண்ணை உரிமையாளர்கள் முறையாக அழிப்பதில்லை. அதற்குப் பதிலாக, சாக்குகளில் மூட்டையாக கட்டி, தடுப்பணைகள், கால்வாய், நீர் நிலைகளின் கரைகள் மற்றும் பொது இடங்களில் வீசி விடுகின்றனர். இதனால், நீர் நிலை, கால்வாய்கள் மாசுபடுகின்றன.

ஈக்கள் மொய்க்கின்றன. நாய்கள் செத்த கோழிகளை கடித்து குதறி மேலும் நாசமாக்குகின்றன. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்,'பண்ணைகளில் இறக்கும் கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை ஆழமாக குழி தோண்டி, அதன்மீது கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல், பொது இடங்களில் வீசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் இதை கண்காணிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X