பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான சோலார் விளக்குகள்

Added : மே 04, 2021
Share
Advertisement
பெண்ணாடம்; முருகன்குடி வெள்ளாறு மேம்பாலத்தில் பழுதான சோலார் விளக்குகளை அகற்றி, புதிதாக விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த முருகன்குடி - கணபதிகுறிச்சி இடையே உள்ள வெள்ளாறு மேம்பாலம் வழியாக கணபதிகுறிச்சி, கிளிமங்கலம், கே.கே.நகர், மோசட்டை, பெலாந்துறை, பாசிக்குளம் மற்றும் அரியலுார் மாவட்ட மக்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட

பெண்ணாடம்; முருகன்குடி வெள்ளாறு மேம்பாலத்தில் பழுதான சோலார் விளக்குகளை அகற்றி, புதிதாக விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த முருகன்குடி - கணபதிகுறிச்சி இடையே உள்ள வெள்ளாறு மேம்பாலம் வழியாக கணபதிகுறிச்சி, கிளிமங்கலம், கே.கே.நகர், மோசட்டை, பெலாந்துறை, பாசிக்குளம் மற்றும் அரியலுார் மாவட்ட மக்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், செந்துறை, ஜெயங்கொண்டம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.மேம்பாலத்தில், மின் விளக்கு வசதியில்லாததால் இரவு நேரங்களில் பாலத்தைக் கடக்க பொது மக்கள் அச்சமடைந்தனர். அதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் இருபுறமும் 20 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன.ஆனால், சமூக விரோதிகள் பேட்டரி மற்றும் எல்.இ.டி., விளக்குகளை திருடிச் சென்றனர். இதனால், இரவு நேரத்தில் மேம்பாலம் முழுதும் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இவ்வழியே செல்ல பொது மக்கள் அச்சம் அடைகின்றனர்.எனவே, பொது மக்கள் நலன்கருதி, மேம்பாலத்தில் புதிதாக சோலார் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X