பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைகட்டியில் '108' ஆம்புலன்ஸ்

Added : மே 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : ஆனைகட்டி வட்டாரத்தில், பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டுவந்த, '108' ஆம்புலன்ஸ் வசதியை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆனைகட்டி வட்டாரத்தில் துாமனூர், சேம்புக் கரை, துாவைப்பதி, ஆர்நாட்காடு, பனப்பள்ளி, கொண்டனுார், கொண்டனுார்பதுார், ஜம்பு கண்டி

பெ.நா.பாளையம் : ஆனைகட்டி வட்டாரத்தில், பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டுவந்த, '108' ஆம்புலன்ஸ் வசதியை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆனைகட்டி வட்டாரத்தில் துாமனூர், சேம்புக் கரை, துாவைப்பதி, ஆர்நாட்காடு, பனப்பள்ளி, கொண்டனுார், கொண்டனுார்பதுார், ஜம்பு கண்டி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இவர்களின் பயன்பாட்டுக்காக, ஜம்பு கண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் நலம், பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆனைகட்டி வட்டாரத்தில் உள்ள பழங்குடியின மக்கள் நலம் பெறும் வகையில், கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த வாகனம் ஆனைகட்டி வட்டாரத்தில், 24 மணி நேரமும் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவ உதவி தேவைப்படும் பழங்குடியினர், இந்த ஆம்புலன்சை பயன்படுத்தி வந்தனர்.கடந்த சில நாட்களாக, '108' ஆம்புலன்ஸ் வேனுக்கு பதிலாக, மாருதி ஆம்னி வேன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆனைகட்டி வட்டார பழங்குடியினர் கூறியதாவது:'108' ஆம்புலன்சில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட, கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனை சென்று, வர வசதியாக இருந்தது. ஆம்புலன்ஸ் உள்புறம் விலாசமான இடவசதி இருந்ததால், குழந்தைகளை எடுத்துக்கொண்டு ஏறவும், இறங்கவும், கர்ப்பிணிகள் படுத்து செல்லவும், உட்கார்ந்து கொள்ளவும், வசதி இருந்தது.ஆனால், மாருதி ஆம்னி வேனில் மிகக் குறுகிய இடத்தில், அமர்ந்து செல்வதும், படுத்து செல்வதும், நோயாளிகளுடன் வரும் உதவியாளர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.இந்த சிறிய வேனில், ஆனைகட்டியில் இருந்து சுமார், 35 கி.மீ., தொலைவில் உள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று, வருவதில் சிக்கல் உள்ளது. '108' ஆம்புலன்சை, அரசு, ஆனைகட்டி வட்டாரத்தில் மீண்டும் நிறுத்தி, பழங்குடியின மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X