பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடும் அபாயம்

Added : மே 04, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்; கொரோனா கட்டுப்பாடுகளால் குடிநீர் பாட்டில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சிகள் மூலம் வழங்கும் குடிநீரையே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால், சில ஆண்டுகளாக விளம்பர மோகத்தால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்தால் மட்டுமே உடலுக்கு நல்லது என்ற எண்ணம் மக்களிடம் வேகமாக பரவியது.இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை

நெல்லிக்குப்பம்; கொரோனா கட்டுப்பாடுகளால் குடிநீர் பாட்டில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சிகள் மூலம் வழங்கும் குடிநீரையே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால், சில ஆண்டுகளாக விளம்பர மோகத்தால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்தால் மட்டுமே உடலுக்கு நல்லது என்ற எண்ணம் மக்களிடம் வேகமாக பரவியது.இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கும் பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகி விட்டனர்.இதனைப் பயன்படுத்தி, தமிழகம் முழுதும் பல ஆயிரம் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் துவங்கப்பட்டன. இதன் மூலம் கேன்களிலும் பாட்டில்களிலும் குடிநீரை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.வீடுகளில் மட்டுமின்றி, திருமணங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பந்திகளில் குடிநீர் பாட்டில்கள் வைப்பது வழக்கமாகிப்போனது.தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் மதுபான பார்கள் மூடப்பட்டன. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ளது.இதனால் குடிநீர் பாட்டில்கள் தேவை குறைந்தது. மேலும், வீடுகளிலும் குடிநீர் கேன் கொண்டு வருபவரை உள்ளே விடுவதற்கு பயந்து உள்ளாட்சிகள் வழங்கும் குடிநீரையே காய்ச்சி குடிக்க துவங்கினர்.இதனால் குடிநீர் பாட்டில்களின் விற்பனை குறைந்து, ஆலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து நெல்லிக்குப்பத்தில் இயங்கி வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உரிமையாளர் ஷேக்தாவூத் கூறுகையில், 'கொரோனா கட்டுப்பாடுகளால் குடிநீர் பாட்டில் விற்பனை முடங்கியுள்ளது.இதனால், வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் குடிநீர் ஆலையை மூட வேண்டிய சூழல் ஏற்படும். அரசு இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X