அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெருங்கி வந்த வெற்றி நழுவியது! தாராபுரத்தில் பா.ஜ., முருகன் தோல்வி ஏன்?

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
திருப்பூர் : தாராபுரம் தொகுதியில், பா.ஜ., மாநில தலைவர் முருகன், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், தோற்று போனாலும், இதை வெற்றிக்கான அடையாளமாக, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் கருதுகின்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக மாநில தலைவர் முருகன் போட்டியிட்டார். பிரதமர் மோடி, தாராபுரத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். கட்சி நிர்வாகிகள்,
BJP, Murugan, Bharatiya Janata Party, தாராபுரம், முருகன், தோல்வி

திருப்பூர் : தாராபுரம் தொகுதியில், பா.ஜ., மாநில தலைவர் முருகன், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், தோற்று போனாலும், இதை வெற்றிக்கான அடையாளமாக, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் கருதுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக மாநில தலைவர் முருகன் போட்டியிட்டார். பிரதமர் மோடி, தாராபுரத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். கட்சி நிர்வாகிகள், நடிக, நடிகையர் என ஏராளமானோர் பிரசாரம் செய்தனர்.எனினும், தி.மு.க., வேட்பாளர் கயல்விழி 89 ஆயிரத்து 986 ஓட்டுகள் பெற்று, 1,393 ஓட்டுகள் வித்தியாசத்தில், முருகனை வீழ்த்தினார். முருகன், 88,593 ஓட்டுகள் பெற்றார்.

ஓட்டு எண்ணிக்கையின்போது, துவக்கத்தில் முருகன் முன்னணியில் இருந்துவந்தார். 20 சுற்றுகளுக்கு பின், முருகன் பின்னடைவை சந்திக்க துவங்கினார். நகரப்பகுதிகளில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் விழும் என எதிர்பார்த்தது நிறைவேறாமல் போனது. இதை பா.ஜ.,வின் தோல்விக்கான காரணமாக கூறினாலும், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வியை, வெற்றியின் அடையாளமாகவே அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் பார்க்க துவங்கியுள்ளனர்.


latest tamil news



தாராபுரம் தொகுதி, கடந்த முறை தி.மு.க., கூட்டணியில், காங்., வென்ற தொகுதி. இந்த முறை, தி.மு.க.,வே களம் இறங்கியது. இதனால் போட்டி கடுமையானது.கடந்த முறை, காங்.., வேட்பாளர், 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளரை வீழ்த்தினார். சொந்த தொகுதியாக இது இல்லாதபோதும், அதிக ஓட்டுகளை முருகன் பெற்றிருக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்களில், களமிறங்கும்போது, வெற்றியை ஈட்டுவது உறுதி என்கின்றனர் பா.ஜ.,வினர்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-மே-202116:01:46 IST Report Abuse
Malick Raja அதிமுகவின் ஓட்டுக்கள் என்பதை தெளிவாக சொல்லவேண்டும்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202118:10:08 IST Report Abuse
தமிழவேல் இதே கதைவசனம் கமலுக்கும் ஒத்து வருமா ?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-மே-202114:34:29 IST Report Abuse
sankaseshan அமராவதி ஆற்றில் மண் அள்ளுவதற்கு ஆரம்பிசாச்சா ? செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதி .
Rate this:
Prakash - Chennai,இந்தியா
04-மே-202118:52:30 IST Report Abuse
Prakashஅது வரும் வெள்ளிக்கிழமை 11:05 மணிக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X