அரசியல் செய்தி

தமிழ்நாடு

காலி: 136 வேட்பாளர்களில் 118 பேரின் டிபாசிட்...தே.மு.தி.க., - அ.ம.மு.க.,வுக்கு 'பெப்பே'

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் போட்டியிட்ட 136 வேட்பாளர்களில் 118 பேர் டிபாசிட் இழந்தனர். தே.மு.தி.க.,- அ.ம.மு.க.,- மக்கள் நீதி மய்யம் கட்சிகள் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டன.கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி (தனி) தொகுதியில் 15 பேர், விருத்தாசலம் 29, நெய்வேலி 12, பண்ருட்டி 15, கடலுார் 15, குறிஞ்சிப்பாடி 12, புவனகிரி 14, சிதம்பரம் 11, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 13 பேர்,
 காலி:  136 வேட்பாளர்களில் 118 பேரின் டிபாசிட்...தே.மு.தி.க., - அ.ம.மு.க.,வுக்கு 'பெப்பே'

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் போட்டியிட்ட 136 வேட்பாளர்களில் 118 பேர் டிபாசிட் இழந்தனர். தே.மு.தி.க.,- அ.ம.மு.க.,- மக்கள் நீதி மய்யம் கட்சிகள் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டன.

கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி (தனி) தொகுதியில் 15 பேர், விருத்தாசலம் 29, நெய்வேலி 12, பண்ருட்டி 15, கடலுார் 15, குறிஞ்சிப்பாடி 12, புவனகிரி 14, சிதம்பரம் 11, காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 13 பேர், என, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - காங்., - அ.ம.மு.க., - தே.மு.தி.க., - வி.சி., உள்ளிட்ட பிரதான கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என, மொத்தம் 136 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தவிர, தே.மு.தி.க., - அ.ம.மு.க., - ம.நீ.ம., - ஐ.ஜே.கே., - சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சொல்லும்படியாக ஓட்டுகளை பெறாததுடன், 118 பேர் டெபாசிட் இழந்தனர்.தே.மு.தி.க., - அ.ம.மு.க.,வுக்கு பெப்பேகுறிப்பாக, தே.மு.தி.க., வின் கோட்டையாக விளங்கிய விருத்தாசலத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்று டிபாசிட் இழந்தார்.அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து பண்ருட்டியில் 3,337 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். கடலுாரில் ஞானபண்டிதன் 1499, திட்டக்குடியில் உமாநாத் 4,142 ஓட்டுகள் மட்டுமே பெற்றனர்.அதே போன்று, தே.மு.தி.க., கூட்டணி கட்சியான அ.ம.மு.க., வேட்பாளர்களும் சொற்ப ஓட்டுகளையே பெற்றனர்.நெய்வேலியில் பக்தரட்சகன் 2,230, குறிஞ்சிப்பாடியில் வசந்தகுமார் 840, காட்டுமன்னார்கோவில் நாராயணமூர்த்தி 1,904, புவனகிரியில் பாலமுருகன் 2,470, சிதம்பரத்தில் நந்தினிதேவி 1,388 ஓட்டுகள் மட்டுமே பெற்றனர்.சாதித்த நாம் தமிழர் கட்சிஅதே சமயத்தில் நாம் தமிழர் கட்சி 9 தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகளை பெற்றதுடன், 8 இடங்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.

கடலுாரில் போட்டியிட்ட ஜலதீபன் 9,563 ஓட்டுகளையும், பண்ருட்டியில் சுபாஷினி 6,483, திட்டக்குடியில் காமாட்சி 10,591, குறிஞ்சிப்பாடியில் சுமதி 8,520, நெய்வேலியில் ரமேஷ் 7,785, விருத்தாசலத்தில் அமுதா நம்பியார் 8,642, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நிவேதா 6,806, சிதம்பரத்தில் நடராஜன் கிருஷ்ணமூர்த்தி 9,071, புவனகிரியில் ரத்தினவேல் 6,958 ஓட்டுகளைப் பெற்றனர்.சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கமலின் ம.நீ.ம., பாரிவேந்தரின் ஐ.ஜே.கே., மற்றும் ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் சொற்ப ஓட்டுகளையே பெற்றனர்.மாவட்ட அளவில் சுயேச்சைகளும் ஜொலிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X