பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அலுவலகத்தில் வைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
கடலுார்; ஓட்டு எண்ணிக்கை முடிந்ததால், அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய நான்கு இடங்களில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவி பாட்'

கடலுார்; ஓட்டு எண்ணிக்கை முடிந்ததால், அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய நான்கு இடங்களில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவி பாட்' ஆகியவற்றை நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை மையங்களில் இருந்து அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.கடலுார் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 412 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 412 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 442 'விவி பேட்' இயந்திரங்களும் கடலுார் அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, கடலுார் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.பின்னர் அங்கு தரைதளத்தில் உள்ள ஒரு அறைகளில் பாதுகாப்பாக வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டது.இதே போன்று, குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான 404 ஓட்டுப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 433 'விவி பாட்', குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திற்கும்; பண்ருட்டி, சிதம்பரம் ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.விருத்தாசலம்விருத்தாசலம், திட்டக்குடி தொகுதியைச் சேர்ந்த 355 ஓட்டுச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் இருந்து நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமார் முன்னிலையில், விருத்தாசலம் சேமிப்பு கிடங்கிற்கு, கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் வேல்முருகன், வி.ஏ.ஓ., மாயக்கண்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X