சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை அகலப்படுத்தும் பணி: மரங்கள் வெட்டி சாய்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம்; விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான கனரக வாகனங்கள் சென்னை, வேலுார், திருப்பதி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றன. 21 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை இரண்டு வழிச்

விருத்தாசலம்; விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான கனரக வாகனங்கள் சென்னை, வேலுார், திருப்பதி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றன. 21 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை இரண்டு வழிச் சாலையாக உள்ளது.நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில் 198 கோடி ரூபாய் மதிப்பில், அகலப்படுத்தும் பணி நடக்கிறது.முதல் கட்டமாக சாலையோரம் உள்ள பழமையான புளியமரம் மற்றும் இலுப்பை, புங்கை மரங்களை வேரோடு அகற்றும் பணி நடக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் இருந்த பழமையான மரங்கள் அகற்றப்படுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக சாலையோரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X