பொது செய்தி

தமிழ்நாடு

'சப்பு'ன்னு இருக்குது குடிக்கும் நீர்; மக்களின் தாகம் தீர்ப்பாரா கமிஷனர்?

Added : மே 04, 2021
Share
Advertisement
போத்தனூர் : மாநகராட்சியின், 94 முதல் 98 வரையிலான வார்டுகளுக்கு, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் மூலம், 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 99 மற்றும், 100வது வார்டுகளுக்கு அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுகிறது.மேற்குறிப்பிட்ட 94 முதல், 98 வரையிலான ஐந்து வார்டுகளுக்கும், ஆழியாறு நீருடன், சிறுவாணி நீரும் கலந்து வரும். இந்நீர், குடிப்பதற்கு ஏற்றவகையில்,

போத்தனூர் : மாநகராட்சியின், 94 முதல் 98 வரையிலான வார்டுகளுக்கு, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் மூலம், 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 99 மற்றும், 100வது வார்டுகளுக்கு அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட 94 முதல், 98 வரையிலான ஐந்து வார்டுகளுக்கும், ஆழியாறு நீருடன், சிறுவாணி நீரும் கலந்து வரும். இந்நீர், குடிப்பதற்கு ஏற்றவகையில், சிறிதளவு சுவையுடன் இருக்கும்.இச்சூழலில், 97வது வார்டிலுள்ள அன்னை இந்திரா நகர் மற்றும் விரிவு பகுதிகள், கஸ்தூரி நகர், அசோக் நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதிகளுக்கு, கடந்த முறை விநியோகம் செய்த குடிநீர், சுவையின்றி இருந்தது.

மக்கள் குடிப்பதற்கும், உணவு சமைக்கவும் இந்நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் வெளியிடங்களுக்கு சென்று, குடிநீர் பிடித்து வந்து, தாகத்தை தீர்க்கின்றனர். திடீரென நீரின் சுவை மாறியது குறித்து, குடிநீர் விநியோகிப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது 'கோடை காலத்தில் சில சமயம் சிறுவாணி நீரின் சுவை போய்விடும். இது எப்போது ஏற்படும் என தெரியாது. பின் அதுவே சரியாகிவிடும்' என்றார்.எது எப்படியோ, தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மக்கள் குடிநீருக்காக அலைவதை தவிர்க்க, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X