பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசியில் லட்சம் ஓட்டு அள்ளிய அ.தி.மு.க., தனபால்

Added : மே 04, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி சட்டசபை தொகுதியில், கடந்த, 1971 முதல் இதுவரை நடந்த, 12 தேர்தலில், எட்டு முறை அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.கடந்த, 2001 முதல், தொடர்ந்து நான்கு முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., இம்முறையும் வெற்றி பெற்று, தொடர்ந்து, 25 ஆண்டு காலம் தொகுதியை தக்க வைத்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.இம்முறை, 2.13 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகின. இதில், தொடர்ந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க.,

அவிநாசி : அவிநாசி சட்டசபை தொகுதியில், கடந்த, 1971 முதல் இதுவரை நடந்த, 12 தேர்தலில், எட்டு முறை அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

கடந்த, 2001 முதல், தொடர்ந்து நான்கு முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., இம்முறையும் வெற்றி பெற்று, தொடர்ந்து, 25 ஆண்டு காலம் தொகுதியை தக்க வைத்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.இம்முறை, 2.13 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகின. இதில், தொடர்ந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க., சார்பில் களம் இறங்கிய வேட்பாளர் தனபால், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 274 ஓட்டுக்களை பெற்றார்.

இது 55.16 சதவீத ஓட்டு. தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அதியமான் ராஜு, 66 ஆயிரத்து 692 ஓட்டுக்களை பெற்றார். இது, 31.22 சதவீத ஓட்டு.கடந்த, 2016 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால், 93 ஆயிரத்து 366 ஓட்டுகள் பெற்றிருந்தார். இது, 48.11 சதவீத ஓட்டு. தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், 62 ஆயிரத்து 692 ஓட்டுகளை பெற்றிருந்தார். இது, 32.31 சதவீத ஓட்டு. எனவே, தி.மு.க.,வை விட அ.தி.மு.க., வின் ஓட்டு வங்கி இம்முறை அதிகரித்திருக்கிறது. இது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X