பொது செய்தி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி, ம.நீ.ம., வேட்பாளர்கள் 'அடடே' அவிநாசி தொகுதியில் அதிகரித்த ஓட்டு வங்கி

Added : மே 04, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கி அதிகரித்து இருக்கிறது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அவிநாசி தொகுதியில், 2.13 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. இதில் அ.தி.மு.க., 1.17 லட்சம் ஓட்டு, தி.மு.க., 66 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது.இவர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷோபா, 13 ஆயிரத்து 256 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளார். அவர், 6.23 சதவீத

அவிநாசி : அவிநாசி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கி அதிகரித்து இருக்கிறது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அவிநாசி தொகுதியில், 2.13 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. இதில் அ.தி.மு.க., 1.17 லட்சம் ஓட்டு, தி.மு.க., 66 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது.

இவர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷோபா, 13 ஆயிரத்து 256 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளார். அவர், 6.23 சதவீத ஓட்டு பெற்றார்.கடந்த, 2016 தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சுமதி, 1,514 ஓட்டுகள் மட்டுமே பெற்று, நோட்டாவுக்கு (3,534 ஓட்டு) அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். அவர், 0.78 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார்.

ஆக, நாம் தமிழர் கட்சியின் ஓட்டு வங்கி, கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், 5 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. அதே போல், முதல் முறையாக தேர்தல் களம் கண்ட ம.நீ.ம., வேட்பாளர் டாக்டர் வெங்கடேஸ்வரன், 8,379 ஓட்டுகள் பெற்று, நான்காமிடம் பிடித்துள்ளார். இது, 3.94 சதவீத ஓட்டு.இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளூரை சேர்ந்தவர் என்ற போதிலும், பெரிதாக மக்களின் செல்வாக்கு மற்றும் அறிமுகம் இல்லாதவர். வெங்கடேஸ்வரன், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். அவிநாசி தொகுதி மக்கள் மத்தியில் சிறிதும் அறிமுகமில்லாத புதியவர்.

இத்தகைய சூழலில், இந்த இரு கட்சிகளும் கணிசமான அளவுக்கு ஓட்டுகளை பெற்றிருப்பது, மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.'வேட்பாளர்கள் மீது ஈர்ப்பை காட்டிலும், அந்தந்த கட்சியின் மீதுள்ள கொள்கை பிடிப்பின் அடிப்படையில் தான், வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.தொடர்ந்து, அக்கட்சியினர் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் போது, ஓட்டு வங்கியை படிப்படியாக உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்,' என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X