ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ; வெயிலில் தேவையின்றி காத்திருக்கும் மக்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
ராஜபாளையம்; ராஜபாளையம் நெடுஞ்சாலையில் ஒதுங்கி நிற்பதற்கு வழியிருந்தும் நடு ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கும் பஸ்களால் நெரிசல் ஏற்பட, பின் தொடரும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் பலரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.ராஜபாளையம் நகர்பகுதியில் நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஓன்றாகி விட்டது. இதோடு ரோட்டோர திடீர் கடைகள், ஆக்கிரமிப்புகள் என பிரச்னைகளாலும் போக்குவரத்து

ராஜபாளையம்; ராஜபாளையம் நெடுஞ்சாலையில் ஒதுங்கி நிற்பதற்கு வழியிருந்தும் நடு ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கும் பஸ்களால் நெரிசல் ஏற்பட, பின் தொடரும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் பலரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

ராஜபாளையம் நகர்பகுதியில் நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஓன்றாகி விட்டது. இதோடு ரோட்டோர திடீர் கடைகள், ஆக்கிரமிப்புகள் என பிரச்னைகளாலும் போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது. இது மட்டுமன்றி பொது மக்கள் அதிகம் பயணிக்கும் இங்குள்ள நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கிறோம் என்ற போர்வையில் பஸ்களை நடு ரோட்டில் நிறுத்துகின்றனர். இதை பின் தொடர்ந்து வரும் மற்ற வாகனங்களும் வரிசையில் நிற்பதால் மேலும் நெருக்கடிதொடர்கிறது. இதன் மூலம் அனைத்து மக்களும் தவிப்பிற்கு உள்ளாகின்றனர்.ராஜபாளையம் நகர்ப்பகுதி நடுவே செல்லும் இந்த ரோட்டில் தினமும் இந்த அவலம் நடக்கிறது. பஸ் ஸ்டாப் பகுதியில் அகலமான ரோடு இருந்தும் நடு ரோட்டில் நிறுத்துவதை போலீசாரும் கண்டு கொள்வதில்லை.பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட் முன்புறம், காந்தி சிலை ரவுண்டானா, மகப்பேறு மருத்துவமனை, பி.எஸ்.கே பார்க், கலை மன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இந்நிலை தொடர்கின்றன. இவற்றை முறைப்படுத்த நடவடிக்கை அவசியமாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X