கிராமப்புற அரசு பள்ளியில் பாதுகாப்பு கேள்விக்குறி

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.பல பள்ளிகளில் இரவு நேர காவலர்களே இல்லை. எனவே, தற்காலிக காவலர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், விளையாட்டு மைதானமாகவும், 'குடி'மகன்கள் கூத்தாடும் இடமாகவும்

திருப்பூர் : ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பல பள்ளிகளில் இரவு நேர காவலர்களே இல்லை. எனவே, தற்காலிக காவலர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், விளையாட்டு மைதானமாகவும், 'குடி'மகன்கள் கூத்தாடும் இடமாகவும் பயன்பட்டு வருகின்றன. நிறைய பள்ளிகளில் சுற்றுச்சுவர்கள் இல்லை.

பள்ளி கட்டமைப்புகள் மர்ம நபர்களால் சிதிலமடைவதும், அதை பள்ளி நிர்வாகம் சார்பில் சரி செய்வதுமே கிராமப்புற பள்ளிகளில் தொடர் நடவடிக்கையாக உள்ளது. ஊரடங்கு சமயத்தில் மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு, இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத சூழலும் ஒரு காரணம். தினமும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் பாதுகாப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X