சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடி கவுரவ கொலை; சகோதரனுக்கு ஜாமின் மறுப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : மேட்டுப்பாளையத்தில் காதல்ஜோடி கவுரவ கொலை செய்யப்பட்ட வழக்கில், சகோதரன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.மேட்டுப்பாளையம், ரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன்கள் வினோத்,26, கனகராஜ்,24, கார்த்திக்,22, ஆகியோர், சுமை துாக்கும் தொழிலாளியாக வேலை செய்தனர்.இவர்களில் கனகராஜூம், அதே பகுதியை சேர்ந்த வர்ஷினிபிரியாவும் காதலித்து வந்தனர். அந்த பெண் தலித் சமூகத்தை

கோவை : மேட்டுப்பாளையத்தில் காதல்ஜோடி கவுரவ கொலை செய்யப்பட்ட வழக்கில், சகோதரன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம், ரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன்கள் வினோத்,26, கனகராஜ்,24, கார்த்திக்,22, ஆகியோர், சுமை துாக்கும் தொழிலாளியாக வேலை செய்தனர்.இவர்களில் கனகராஜூம், அதே பகுதியை சேர்ந்த வர்ஷினிபிரியாவும் காதலித்து வந்தனர். அந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கருப்பசாமி குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.2019, ஜூன், 25ல், கனகராஜ் வீட்டிற்கு வர்ஷினி பிரியா வந்தபோது, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வினோத் தகராறு செய்தார்.

காதல் ஜோடியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வினோத்தை கைது செய்தனர்.இரண்டு ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத், பலமுறை தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், மீண்டும் மனு தாக்கல் செய்தார்.இவ்வழக்கில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருப்பதால், வினோத்தை ஜாமினில் விடுவிக்க, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாமின் மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X