பொது செய்தி

தமிழ்நாடு

ஆமணக்கு விளைச்சல் அமோகம் ங் மகிழ்ச்சியில் விருதுநகர் விவசாயிகள்

Added : மே 04, 2021
Share
Advertisement
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் விளக்கு எண்ணெய் தயாரிக்க பயன்படும் ஆமணக்கு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஊடுபயிராகவும், வேலி பயிராகவும் ஆமணக்கு விளைவிக்கப்படுகிறது. 50 நாள் பயிரான ஆமணக்கு பயிரில் நோய் தாக்குல் குறைவு. வறட்சியை தாங்கி மானாவாரி பயிராக வளரக்கூடியது. ஆமணக்கு இலைகள், தண்டு பகுதியை கால்நடைகள் விரும்பி உண்பதால்

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் விளக்கு எண்ணெய் தயாரிக்க பயன்படும் ஆமணக்கு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஊடுபயிராகவும், வேலி பயிராகவும் ஆமணக்கு விளைவிக்கப்படுகிறது. 50 நாள் பயிரான ஆமணக்கு பயிரில் நோய் தாக்குல் குறைவு. வறட்சியை தாங்கி மானாவாரி பயிராக வளரக்கூடியது. ஆமணக்கு இலைகள், தண்டு பகுதியை கால்நடைகள் விரும்பி உண்பதால் பெரும்பாலான விவசாயிகள் ஆமணக்கு சாகுபடியில் கவனம் செலுத்துகின்றனர்.ஆமணக்கு விதைகளில் இருந்து விளக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதனால் நன்கு முற்றிய ஆமணக்கு விதைகளை வெயிலில் காய வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை கிடைக்கிறது. இதன் மக்கிய கழிவுகள் மண்ணுக்கு நுண்ணுாட்ட சத்துக்களை கிடைக்க செய்கிறது.விருதுநகர் அருகே உன்னிபட்டியை சேர்ந்த விவசாயி பெரியசாமி: ஆமணக்கு, நித்திய கல்யாணி பூ, சிவப்பு, வெள்ளை சோளப் பயிர் நிலத்தின் சத்துக்களை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. ஆமணக்கு விதைகளை சிலர் கொட்டமுத்து என்றும் அழைப்பர். புரதச்சத்து மிக்க விதைகளை உண்டால் வயிற்று உபாதைகள் இருக்காது. துவர்ப்பு, கசப்பு சுவை கொண்ட ஆமணக்கு விதைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X