சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரமாரியாக வெட்டி கொலை முயற்சி

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெ.நா.பாளையம் : கோவை சாய்பாபா காலனி, ஜீவா நகரை சேர்ந்தவர் மதன்குமார், 24. தற்போது, மேட்டுப்பாளையம் ரோடு, கோட்டை பிரிவில் வசிக்கிறார்.நேற்று முன்தினம், மதன்குமார், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தலை, கைகள் ஆகிய இடங்களில் சரமாரியான அரிவாள் வெட்டு காயங்களுடன் சேர்ந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு, மதன் குமாருக்கு

பெ.நா.பாளையம் : கோவை சாய்பாபா காலனி, ஜீவா நகரை சேர்ந்தவர் மதன்குமார், 24. தற்போது, மேட்டுப்பாளையம் ரோடு, கோட்டை பிரிவில் வசிக்கிறார்.நேற்று முன்தினம், மதன்குமார், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தலை, கைகள் ஆகிய இடங்களில் சரமாரியான அரிவாள் வெட்டு காயங்களுடன் சேர்ந்தார்.

பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு, மதன் குமாருக்கு தெரிந்த நபர்கள், மேட்டுப்பாளையத்தில் நாய்சேகர் என்பவரை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என, மதன்குமார் தனது மனைவியுடன் கோட்டை பிரிவில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.

'நேற்றுமுன்தினம் அஸ்வின், சூர்யா மற்றும் சிலர் தன்னை மது அருந்த அழைத்ததாகவும், சென்றபோது, மறைத்து வைத்திருந்த அரிவாளால், அஸ்வின் சரமாரியாக வெட்டியதாகவும்' மதன்குமார் போலீசாரிடம் கூறினார். பெ.நா.பாளையம் போலீ சார், சூர்யா, அஸ்வின் மற்றும் சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202105:18:38 IST Report Abuse
டுமீலன் இவனுங்க ஆட்சிக்கு வந்தாலே.. கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து ஆரம்பித்துவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X