தமிழ்நாடு

செல்லாத தபால் ஓட்டு; திருப்பூரில் எக்கச்சக்கம்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில், பதிவான தபால் ஓட்டுக்களில், 1,894 ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்களாக, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர் மற்றும் போலீசார், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர், மாற்றுத்திறனாளிகளுக்கு, தபால் ஓட்டு வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 005 தபால் ஓட்டு பதிவாகியுள்ளன.மொத்தம் பதிவான ஓட்டில், 1,894 ஓட்டுகள் செல்லாததாக

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில், பதிவான தபால் ஓட்டுக்களில், 1,894 ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்களாக, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர் மற்றும் போலீசார், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர், மாற்றுத்திறனாளிகளுக்கு, தபால் ஓட்டு வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 005 தபால் ஓட்டு பதிவாகியுள்ளன.மொத்தம் பதிவான ஓட்டில், 1,894 ஓட்டுகள் செல்லாததாக கருதி, தள்ளுபடி செய்யப்பட்டன. முன்மொழிவு படிவத்தை இணைக்காதது; முன்மொழிவு படிவத்தில் அதிகாரி கையொப்பம் இல்லாதது, எந்த வேட்பாளருக்கும், 'டிக்' செய்யாதது, வாக்காளர் வரிசை எண் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, தபால் ஓட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

வேட்பாளர்களுக்கு, 12 ஆயிரத்து, 971 ஓட்டுகள் பதிவாகியுள்ளன; 1,894 ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்களாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நோட்டாவுக்கு, 140 ஓட்டு பதிவாகியுள்ளன.மாவட்டத்தில் அதிகபட்சமாக, தாராபுரத்தில், 514 தபால் ஓட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. காங்கயத்தில், 508; அவிநாசியில், 338; உடுமலையில், 299; திருப்பூர் தெற்கில், 118; பல்லடத்தில், 98; மடத்துக்குளத்தில், 11; திருப்பூர் வடக்கில், எட்டு ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்களாக கருதி, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X