அகற்றுங்க; அணைகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேலங்கள்| Dinamalar

அகற்றுங்க; அணைகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேலங்கள்

Added : மே 04, 2021
Share
சாத்துார், ஏப்ரல் 4-விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைகளில் சீமைக்கருவேல மரங்களை அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கவுசிகா நதி , என பல ஆறுகள் ஒடுகின்றன. இவற்றின் குறுக்கே குல்லூர்சந்தை , வெம்பக்கோட்டை, இருக்கன் குடி, கோல்வார்பட்டி , இரவார்பட்டி, பெரிய கொல்லபட்டி, சங்கர நத்தம் உள்ளிட்ட அணைகளும்

சாத்துார், ஏப்ரல் 4-விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைகளில் சீமைக்கருவேல மரங்களை அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கவுசிகா நதி , என பல ஆறுகள் ஒடுகின்றன. இவற்றின் குறுக்கே குல்லூர்சந்தை , வெம்பக்கோட்டை, இருக்கன் குடி, கோல்வார்பட்டி , இரவார்பட்டி, பெரிய கொல்லபட்டி, சங்கர நத்தம் உள்ளிட்ட அணைகளும் கட்டப்பட்டுள்ளது. பருவ மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் காணப்படும் .மற்ற நாட்களில் வறண்டு விடுகின்றன. இதனால் இங்கு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிலத்தடி நீரை நாசம் செய்கின்றன. ஆற்றில் கிணறு அமைத்து ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சிகள், கிணற்றில் தண்ணீர் வற்றி விட வறட்சியால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. சீமைக்கருவேல மரங்கள் அகற்றி அனைகளை ஆழப்படுத்துவதன் மூலம் அதிகளவில் தண்ணீர் சேமிக்கலாம். மணல் அதிகளவில் படியும் . அதே நேரத்தில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். அணை, பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.............அணைகளில் மரங்கள்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைகளில் சீமைக்கருவேல முள் செடிகளே அதிகளவில் வளர்ந்துள்ளது. இவற்றை ஆண்டுதோறும் அகற்றுவதன் மூலம் அணைகளில் தண்ணீர் தேங்கும். குடிநீர் ஆதாரம் கெடாமல் பாதுகாக்கலாம். கரைப்பகுதியில் 'மா, பழா, புளியமரம், வேப்பமரம், நாவல், தேக்கு போன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் சுத்தமான காற்றும் மக்களின் ஆரோக்கியமும் மேம் படும்.அசோக், சமூக ஆர்வலர். சாத்துார்............

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X