பொது செய்தி

தமிழ்நாடு

'சித்த மருத்துவத்தால் ரத்தம் உறைவதை தடுக்கலாம்'

Added : மே 04, 2021
Share
Advertisement
''கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு, அதீத பயம் உள்ளது. இந்த பயம் உளவியல் நோயாக மாறி, உடலை பலவீனப்படுத்தும்,'' என்கிறார் சித்த மருத்துவர் சரவணன்.கொரோனாவை ஒரு தொற்று நோய் என்று தெரிந்த பிறகு, விலகி இருந்தால் பிரச்னை இல்லை. தள்ளி இரு; தனித்து இரு, என்பதுதான் இதன் தாரக மந்திரம்.எந்த உணவு சாப்பிட்டாலும், சூடாக சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும் போது கூட, கொஞ்சம் தள்ளி

''கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு, அதீத பயம் உள்ளது. இந்த பயம் உளவியல் நோயாக மாறி, உடலை பலவீனப்படுத்தும்,'' என்கிறார் சித்த மருத்துவர் சரவணன்.

கொரோனாவை ஒரு தொற்று நோய் என்று தெரிந்த பிறகு, விலகி இருந்தால் பிரச்னை இல்லை. தள்ளி இரு; தனித்து இரு, என்பதுதான் இதன் தாரக மந்திரம்.எந்த உணவு சாப்பிட்டாலும், சூடாக சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும் போது கூட, கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது. நோய் தடுப்புக்கு சித்தாவில், லவங்க பட்டை சூரணம், திப்பிலி ரசாயனம் இவை இரண்டும் எடுத்துக் கொள்ளலாம்.

திப்பிலி ரசாயனம் நுரையீரலில் ஏற்படும் தொற்றை தடுக்கும்.லவங்கப்பட்டை சூரணம், ரத்த குழாய்களில் ரத்தம் உறையும் தன்மையை குறைக்கும். மூன்று முதல் ஐந்து நாட்கள் சாப்பிட்டால் போதும். சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொண்டால் நல்லது.சுவாச குடோரி என்ற மாத்திரையும் உள்ளது. இவை எல்லாம் இயற்கை மருந்துகள்தான்; பக்க விளைவு வராது.'கும்பித்த சுவாசம்' என்ற சுவாசப்பயிற்சி உள்ளது. மூக்கு வழியாக மூச்சை இழுத்து தம் பிடித்து, வாய் வழியாக வெளியே விட வேண்டும். இந்த பயிற்சி நுரையீரலை பலப்படுத்தும்.மருத்துவ ஆலோசனைக்கு, 90432 12789 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X