சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாக்கடை கால்வாய் தரமில்லை; பணியை தடுத்த பொதுமக்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம் : சாக்கடை கால்வாய் கட்டுமானத்தில், தரமில்லை என்று கூறி, பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, 30வது வார்டு ராஜா நகரில் மாநகராட்சி சார்பில், சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ரோட்டின் ஒரு பக்கம் சாக்கடை கால்வாய் கட்டும் பணி முடிந்து, மற்றொரு பக்கம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

அனுப்பர்பாளையம் : சாக்கடை கால்வாய் கட்டுமானத்தில், தரமில்லை என்று கூறி, பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி, 30வது வார்டு ராஜா நகரில் மாநகராட்சி சார்பில், சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ரோட்டின் ஒரு பக்கம் சாக்கடை கால்வாய் கட்டும் பணி முடிந்து, மற்றொரு பக்கம் கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமானப்பணி தரம் இல்லாமலும், முறையாக அளவீடு செய்யாமல் அப்பகுதியில் உள்ள தனியார் இடத்தை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டு வருவதாக கூறி, அப்பகுதி பொதுமக்கள் கால்வாய் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

மாநகராட்சி இரண்டாம் மண்டல உதவி கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உதவி பொறியாளர் சுப்பிரமணியம், கட்டுமான பணி உரிய தரத்துடன் அளவீடு செய்து கட்டப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X