பொது செய்தி

தமிழ்நாடு

477 பேருக்கு கொரோனா

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், நேற்று 477 பேருக்கு கொரோனா உறுதியானது. குணமடைந்த, 519 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் எண்ணிக்கை, 27 ஆயிரத்து, 716 ஆகியுள்ளது.நேற்று, 519 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

திருப்பூர் : திருப்பூரில், நேற்று 477 பேருக்கு கொரோனா உறுதியானது. குணமடைந்த, 519 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் எண்ணிக்கை, 27 ஆயிரத்து, 716 ஆகியுள்ளது.நேற்று, 519 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை குறைந்து, பாதிப்பு அதிகரித்து வந்தது.

இந்நிலையில், 15 நாட்களுக்கு பின் 'டிஸ்சார்ஜ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று குணமடைந்த, 519 பேருடன் சேர்த்து, இதுவரை, 24 ஆயிரத்து, 374 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில், இதுவரை, 242 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளது.ஈரோடு, திருப்பூர், கோவையில் உள்ள தனியார், அரசு மருத்துவமனையில், 3,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X