ரோடு சீரமைப்புக்காக போராடும் கிராம மக்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
சிவகங்கை; இளையான்குடி அருகே பெருமானேந்தல் கிராம சாலையை சீரமைக்க கோரிஇரு ஆண்டுகளாக அரசுக்கு மனு கொடுத்தும் இன்று வரை அப்பகுதி மக்கள் அலைக்கழிப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.அரனையூரில் இருந்து தோக்கானேந்தல் வழியாக பெருமானேந்தல் கிராமத்திற்குரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு 450 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.4 கி.மீ., நீளமுள்ள

சிவகங்கை; இளையான்குடி அருகே பெருமானேந்தல் கிராம சாலையை சீரமைக்க கோரிஇரு ஆண்டுகளாக அரசுக்கு மனு கொடுத்தும் இன்று வரை அப்பகுதி மக்கள் அலைக்கழிப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.அரனையூரில் இருந்து தோக்கானேந்தல் வழியாக பெருமானேந்தல் கிராமத்திற்குரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு 450 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.4 கி.மீ., நீளமுள்ள சாலைகுண்டும், குழியுமாக உள்ளது.இந்த ரோட்டை சீரமைக்க கோரி அப்பகுதிமக்கள் 2019 ல் கலெக்டர், முதல்வர் என மனு கொடுத்துள்ளனர்.அந்த ரோடு இன்று வரை சீரமைக்கப்படாத நிலை உள்ளது. தற்போது ரோடு மோசமானநிலையில் இருப்பதால் இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் சில மாதங்களுக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இந்த கிராமத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. அவசரத்திற்கு கிராம மக்கள் இளையான்குடிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து இந்த மனுவுக்கு பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.2020 ல் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் ரோடு சீரமைப்பு பணிக்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.கிராமப்புற சாலைகளை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரோடு சீரமைப்பு பணியை தொடங்க வேண்டும், என கிராம மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X