பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் புதிய அரசு மீது வர்த்தக சபை நம்பிக்கை

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையுள்ளதாக, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தெரிவித்துள்ளது.இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன், தமிழக முதல்வராகும் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளதாவது:சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ள இச்சூழலில்,

கோவை : தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையுள்ளதாக, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தெரிவித்துள்ளது.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்ரமணியன், தமிழக முதல்வராகும் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளதாவது:சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ள இச்சூழலில், தொழில் வர்த்தக சபை மற்றும் வர்த்தகம், தொழில் நிறுவனங்களின் சங்கங்கள்,தமிழக அரசுடன் இணக்கமாக இருந்து பணிபுரிய விரும்புகிறது. தங்களது தேர்தல் அறிக்கையில், தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிவித்துள்ளீர்கள்.

எங்களது வர்த்தக சபை சார்பிலும்,வளர்ச்சி கட்டமைப்புக்கான தேவைகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம். இதற்கு தேவையான நடவடிக்கைகளை, தங்களது அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.வர்த்தகம்,தொழில் வளர்ச்சியானது தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும். தொழில் நகரான கோவைக்கும், எங்களது வர்த்தக சபைக்கும் தங்களது வருகையை எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X