சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.எப்., அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; ஆபீஸ் மூடல்

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : கோவை பி.எப்., மண்டல அலுவலக ஊழியர்கள் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கோவை பாலசுந்தரம் நோட்டில் உள்ள பி.எப்., மண்டல அலுவலகத்துக்கு, தினமும், 500க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள், பென்ஷன், முன் பணம் மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட, பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏப்.,30க்கு பிறகு,

கோவை : கோவை பி.எப்., மண்டல அலுவலக ஊழியர்கள் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் நோட்டில் உள்ள பி.எப்., மண்டல அலுவலகத்துக்கு, தினமும், 500க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள், பென்ஷன், முன் பணம் மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட, பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏப்.,30க்கு பிறகு, சந்தாதாரர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டாம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவை பி.எப்., மண்டல அலுவலக ஊழியர்கள், 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் தொடர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'முதலில் அலுவலக ஊழியர்கள் ஒன்பது பேருக்கு, தொற்று ஏற்பட்டது. இப்போது மேலும் ஏழு ஊழியர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதனால் தற்காலிகமாக அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, சந்தாதாரர்கள் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டாம். அனைத்து தேவைகளுக்கும் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்' என்றார்.அலுவலகம் மூடப்பட்டு இருப்பது தெரியாமல், சந்தாதாரர்கள் பலர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். இது குறித்து அங்குள்ள ஊழியர்கள் விளக்கி கூறியும், சந்தாதாரர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X