பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சை அளிக்க திட்டம்

Added : மே 04, 2021
Share
Advertisement
சிவகங்கை; மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளன. பிற மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் கூட நோயாளிகளை சிவகங்கைக்கு அனுப்பி விடுகின்றனர். மாவட்ட அளவில் இருந்து ஏராளமான நோயாளிகள் வருவதால்,

சிவகங்கை; மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளன. பிற மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் கூட நோயாளிகளை சிவகங்கைக்கு அனுப்பி விடுகின்றனர். மாவட்ட அளவில் இருந்து ஏராளமான நோயாளிகள் வருவதால், உரியநேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறுகின்றனர்.அமராவதிபுதுார் டி.பி., சானிடோரியத்தில் உள்ள 92 படுக்கை, காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்புத்துார் சுவிடீஸ் மருத்துவமனை மற்றும் சிவகங்கை அருகே கீழக்கண்டனி தனியார் கல்லுாரியில் தலா 100 படுக்கைகள் அமைத்துள்ளனர்.இங்கு டாக்டர்களை கொண்டு கொரோனா உறுதியுடன் வரும் நோயாளிகளை ஸ்கிரீனிங்' செய்து, அவசியம் இருக்கும் பட்சத்தில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்புவதென முடிவு செய்துள்ளனர்.லேசான அறிகுறியுடன் வருவோருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை அளிக்க உள்ளனர். இதற்காக எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை கருவி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த உள்ளனர்.கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் தங்கி சிகிச்சை தரும் டாக்டர், நர்சு, மருத்துவமனை ஊழியர்களுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலகம் மூலம் உணவு வினியோகம் செய்து வருகின்றனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவுகளை எடுத்துள்ளனர்.டீன் ரத்தினவேல், மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி, நிலைய மருத்துவ அலுவலர் மீனா, உதவி அலுவலர் முகமது ரபி, மிதுன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X