பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுக்கூடு விலை மீண்டும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா இரண்டாவது அலை காரணமாக, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அரிதாகவே நடக்கின்றன. இதனால், ஜவுளிக்கடைகளில் பட்டுச்சேலை விற்பனை குறைந்துள்ளதால், பட்டுக்கூடு விலை வீழ்ச்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி உள்ளிட்ட

கோவை : கொரோனா இரண்டாவது அலை காரணமாக, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அரிதாகவே நடக்கின்றன. இதனால், ஜவுளிக்கடைகளில் பட்டுச்சேலை விற்பனை குறைந்துள்ளதால், பட்டுக்கூடு விலை வீழ்ச்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள், தங்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை, கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.கடந்தாண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, பட்டுக்கூடு விலை வீழ்ச்சி அடைந்தது. கிலோவுக்கு, 200 முதல் 250 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்தது. பட்டு விவசாயிகள் உற்பத்தி விலை கூட, கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகினர்.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, தறிகள் முழுமையாக இயங்கியதால், பட்டு நுால் தேவை அதிகரித்து, கூடு விலையும் அதிகரித்தது. கடந்த மாதம் வரை பட்டுக்கூடு கிலோ, 450 முதல் 500 ரூபாய் வரை விற்பனை ஆனது.இப்போது இரண்டாவது அலையால்,மீண்டும் கூடு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ, 280 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பட்டு கூடு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டாவது தொற்று அதிகரிப்பால், சுப நிகழ்ச்சிகள் குறைந்துள்ளன. ஜவுளி கடைகளில் பட்டு சேலைகள், விற்பனை ஆகாமல் தேங்கி உள்ளன. பட்டு நுால் உற்பத்தியாளர்கள் பட்டுக்கூடு வாங்குவதை நிறுத்தி உள்ளனர். இதனால் விலை குறைந்துள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X