பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி பஸ் ஸ்டாண்ட்களில் சமூக இடைவெளி இல்லை

Added : மே 04, 2021
Share
Advertisement
காரைக்குடி; காரைக்குடி, பேருந்து நிலையங்களில் கொரோனா பரவும் நிலை உள்ளதால் நகராட்சி சார்பில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காரைக்குடி நகராட்சியில், பழைய,புதிய பேருந்து நிலையம் உள்ளது. சென்னை, பெங்களூரு, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் சென்று வருகின்றன.இங்கு பேருந்துக்காக

காரைக்குடி; காரைக்குடி, பேருந்து நிலையங்களில் கொரோனா பரவும் நிலை உள்ளதால் நகராட்சி சார்பில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காரைக்குடி நகராட்சியில், பழைய,புதிய பேருந்து நிலையம் உள்ளது. சென்னை, பெங்களூரு, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் சென்று வருகின்றன.இங்கு பேருந்துக்காக காத்தித்திருக்கும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.இருக்கைகள் மற்றும் பேருந்து தளங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்கின்றனர். இதனால் கொரோனா அபாயம் நிலவுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது நகராட்சி சார்பில் பேருந்துகள், பேருந்து நிலையங்களில் கிருமிநாசினி சுழற்சி முறையில் தெளிக்கப்பட்டது.பயணிகளுக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது. தற்போது, கொரோனா இரண்டாம் அலை வீசி வரும் நிலையில், நகராட்சி சார்பில் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் மற்றும் பயணிகள் முறையாக முகக் கவசம் அணிவது இல்லை என புகார் எழுந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X