பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்தது தடுப்பூசி கையிருப்பு; முகாம்களை நடத்துவதில் சிக்கல்

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, முகாமை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம், அதிகமாக இருந்து வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து, ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வரத்துவங்கினர்.இதன் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழக அரசு கூடுதல்

கோவை : தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, முகாமை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம், அதிகமாக இருந்து வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து, ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வரத்துவங்கினர்.இதன் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழக அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கியது. இருப்பினும், தேவை அதிகமாக இருந்ததால், பற்றாக்குறை இருந்து வருகிறது.

கடந்த வாரம் கோவை மாவட்டத்துக்கு, 45 ஆயிரம் டோஸ்கள் வழங்கப்பட்டன. இதைக்கொண்டு ஒரு வாரம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த, 1ம் தேதி நிலவரப்படி, 7,000 டோஸ்கள் தடுப்பூசி மட்டுமே கைவசம் இருந்தது.நேற்று வரை சென்னையில் இருந்து, புதிதாக தடுப்பூசி வழங்கப்படவில்லை. இதனால், தடுப்பூசி முகாம்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு சில தடுப்பூசி மையங்களில் மட்டுமே, முகாம்கள் நடத்தப்படுகின்றன. கையிருப்பு குறைந்துள்ளதால், ஒரு சில தினங்களில் தடுப்பூசி வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி வந்தால் மட்டுமே முகாம்களை தொடர்ந்து நடத்த முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X