பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் அமைச்சர் பதவி யாருக்கு: தி.மு.க., தொண்டர்கள் எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
சிவகங்கை; தமிழக அமைச்சரவையில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதில், திருப்புத்துார், மானாமதுரை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சிவகங்கை தி.மு.க., மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் 4 வது முறையாக திருப்புத்துார் தொகுதியில் போட்டியிட்டார். இவர் அ.தி.மு.க., வேட்பாளர் மருதுஅழகுராஜை விட 35,440 ஓட்டுக்கள் அதிகம் பெற்று

சிவகங்கை; தமிழக அமைச்சரவையில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதில், திருப்புத்துார், மானாமதுரை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிவகங்கை தி.மு.க., மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் 4 வது முறையாக திருப்புத்துார் தொகுதியில் போட்டியிட்டார். இவர் அ.தி.மு.க., வேட்பாளர் மருதுஅழகுராஜை விட 35,440 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.அ.தி.மு.க.,வின் மானம் காத்த மானாமதுரை தொகுதியில், 2 வது முறையாக தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிட்டு, அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எல்.ஏ., நாகராஜனை விட 14,091 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.இங்கிருந்து வெற்றி பெற்றுள்ள இரு முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்களும், மீண்டும் தமிழக அமைச்சரவையில் இவர்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.குறிப்பாக திருப்புத்துார் எம்.எல்.ஏ., பெரியகருப்பனுக்கு இந்து சமய அறநிலையத்துறையும், மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசிக்கு மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கின்றனர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மாவட்டத்திற்கு ஒருவரை மட்டுமே அமைச்சராக்கும் திட்டத்தில் இருப்பதால், இவர்களில் ஒருவருக்கு தான் அமைச்சர் பதவி வழங்கப்படும் என தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.அ.தி.மு.க., வின் கோட்டையாக உள்ள மானாமதுரையில் தி.மு.க.,விற்கு வெற்றி கொடி நாட்டிய தமிழரசிக்கு வாய்ப்பு கிடைக்குமா, அல்லது 4 வது முறை திருப்புத்துாரில் போட்டியிட்டி வெற்றி பெற்ற பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X