அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்தியில் ஆட்சி மாற்றம்: சிதம்பரம் யோசனை

Added : மே 04, 2021 | கருத்துகள் (109)
Share
Advertisement
காரைக்குடி : ''எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஒன்றாக செயல்பட்டால், மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி,'' என, 'மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.காரைக்குடியில் அவர் அளித்த பேட்டி: ஸ்டாலின் முயற்சியால், வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசின் பணம் மற்றும் அதிகார பலம், தேர்தல் கமிஷனின் நிலை பிரண்ட நடவடிக்கை என, அனைத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி பெற்ற

காரைக்குடி : ''எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஒன்றாக செயல்பட்டால், மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி,'' என, 'மாஜி' மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.



latest tamil news


காரைக்குடியில் அவர் அளித்த பேட்டி: ஸ்டாலின் முயற்சியால், வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசின் பணம் மற்றும் அதிகார பலம், தேர்தல் கமிஷனின் நிலை பிரண்ட நடவடிக்கை என, அனைத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி பெற்ற மம்தாவிற்கு பாராட்டுக்கள்.தேர்தல் கமிஷனை சீரமைக்க வேண்டும். தலைமை தேர்தல் கமிஷனராக சிறந்த அதிகாரிகள் வர வேண்டும்.

காங்., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பா.ஜ.,வை வெற்றியடைய செய்த நான்கு தொகுதி மக்களும், விரைவில் வருந்துவர். நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்தவர்களின் எதிர்காலம் குறித்து, கவலையடைகிறேன். அவர்களை அடையாளம் கண்டு, எங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வேன்.


latest tamil news



கொரோனா தொற்றை எதிர்கொள்வது குறித்து, 11 எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கட்சிகள், தொடர்ந்து ஒன்றாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
05-மே-202113:36:53 IST Report Abuse
Hari இவருக்கும் கருணாநிதிக்கும் மூளை புத்திசாலித்தனமாக வேலை செய்யும் ஆனால் நாட்டுக்காக வேலை செய்யாது, தனக்காக மட்டுமே வேலை செய்யும், இந்த காருண்ணியம்,மனசாட்ச்சி ,ஈஉ, இரக்கம் ,பொதுநலன்,நாட்டு நலன் தேச நலன் என ஏதும் இவர்களுக்கு ஒரு துளிகூட இல்லாத சம்பந்தமே இல்லாத எண்ணம் மற்றும் வார்த்தைகள் அது, பணம் தன குடும்பம் என ஒரே அடியாக வாழும் ஜீவன்கள் இதுகள்.அதனால தமிழக அளவிலும் இந்தியா அளவிலும் என் உலக அளவிலும் ஒரு தவிர்க்கப்படவேண்டிய ஜீவன்கள் என்றால் அதில் இருவரும் முதல் வரிசைல இருப்பார்கள்.புரிந்தவர்களுக்கு இவர்களின் பொது தொண்டின் கரிசனம் என்னான்னு தெரிந்தால் போதும். புரியாதவர்களுக்கு தெரியாமல் இருப்பதே நல்லது,புரியாத மாதரி நடிப்பவர்களுக்கு புரியாமல் இருப்பதே நல்லது.இறைவன் கொடுப்பான் ஆனால் காக்க மாட்டான்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-மே-202118:46:13 IST Report Abuse
g.s,rajan பணப் பசி சிதம்பரம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
04-மே-202118:02:10 IST Report Abuse
Sathya Lets ignore this man
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X