சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் ஆபாசமாக பேசியதை கண்டித்த வாலிபர் கொலை

Added : மே 04, 2021
Share
Advertisement
தேனி; தேனியில் ஆபாசமாக பேசியதை கண்டித்த பிரச்னையில் ராம் பிரசாத் 34, கொலை செய்யப்பட்டார். உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.தேனி பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரன் தெருவை சேர்ந்தவர் ரமணன் 36. இவரது தம்பி ராம் பிரசாத். இவர்களின் வீட்டின் முன் இதே தெருவை சேர்ந்த தினேஷ் 19, மதன் 20, சூர்யா 20, அருள் 21, ஆகியோர் ஆபாசமாக

தேனி; தேனியில் ஆபாசமாக பேசியதை கண்டித்த பிரச்னையில் ராம் பிரசாத் 34, கொலை செய்யப்பட்டார். உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.தேனி பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரன் தெருவை சேர்ந்தவர் ரமணன் 36. இவரது தம்பி ராம் பிரசாத். இவர்களின் வீட்டின் முன் இதே தெருவை சேர்ந்த தினேஷ் 19, மதன் 20, சூர்யா 20, அருள் 21, ஆகியோர் ஆபாசமாக பேசியுள்ளனர். இதனை ராம்பிரசாத் கண்டித்துள்ளார். இப்பிரச்னையில் நேற்று முன்தினம் மாலை ரமணன், ராம்பிரசாத் பைக்கில் வந்த போது நால்வரும் மறித்து கத்தியால் குத்தியதில் ராம்பிரசாத் பலியானார். அல்லிநகரம் போலீசார் கொலை வழக்கில் நால்வரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.மறியல்இந்நிலையில் நேற்று பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயில் அருகே ராம் பிரசாத் உறவினர்கள் உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அல்லிநகரம் இன்ஸ்பெக்டர்கள் குருவத்தயாயம்மாள், ஜெயராணி பேச்சு வார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X